பைக்

அதே டிசைன், ஆனால் வேற மாதிரி லுக்.. அசத்தலாக அறிமுகமான லம்ப்ரெட்டா எலெட்ரா

Published On 2023-11-09 11:57 GMT   |   Update On 2023-11-09 11:57 GMT
  • எலெட்ரா மாடலில் 12 இன்ச் அளவில் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
  • இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்தில் செல்லும்.

லம்ப்ரெட்டா பிராண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் 2023 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்தாலியில் நடைபெறும் EICMA விழாவில் அறிமுகமான லம்ப்ரெட்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எலெட்ரா என்று அழைக்கப்படுகிறது.

புதிய லம்ப்ரெட்டா எலெட்ரா மாடலின் புகைப்படங்களின் படி, இதன் வெளிப்புற தோற்றம் அதன் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. எனினும், இதில் அதிநவீன டிசைனிங் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஸ்டீல் ஃபிரேம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் எலெட்ரா மாடலில் 12 இன்ச் அளவில் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

 

இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 4 கிலோவாட் மற்றும் 11 கிலோவாட் திறன் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதில்- இகோ, ரைடு மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவிதமான ரைடு மோட்கள் உள்ளன. முழு சார்ஜ் செய்தால் இந்த ஸ்கூட்டர் 130 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.

 

தற்போது கான்செப்ட் வடிவில் இருக்கும் லம்ப்ரெட்டா எலெட்ரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது உற்பத்திக்கு வரும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. மேலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் குறைவுதான்.

Tags:    

Similar News