பைக்

சுசுகி ஹயபுசா லிமிடெட் எடிஷன் அறிமுகம்

Published On 2022-11-01 10:00 GMT   |   Update On 2022-11-01 10:00 GMT
  • சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஹயபுசா மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
  • புது லிமிடெட் எடிஷன் ஹயபுசா மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

சுசுகி நிறுவனம் ஹயபுசா லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லிமிடெட் எடிஷன் மாடல் "Bol d'Or " என அழைக்கப்படுகிறது. ஹயபுசா லிமிடெட் எடிஷன் மாடலில் காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் அப்டேட்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாடலில் ஹயபுசாவின் பாரம்பரிய அம்சங்களுடன் புதிய பெயிண்ட் மற்றும் விசேஷ ஸ்டிக்கரிங் செய்யப்பட்டு இருக்கிறது.

ஹயபுசா ஸ்டாண்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது புதிய மாடலில் பெரிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஃபிளாட் சேடில், ரியர் சீட் கௌல், முன்புற பிரேக் மற்றும் கிளட்ச் லீவர் அப்கிரேடு, சிறிய டெயில் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலிலும் 1340 சிசி லிக்விட் கூல்டு இன்-லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அக்ரபோவிக் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் என்ஜின் கிரான்க்-கேஸ் தற்போது கார்பன் பைபர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய சுசுகி ஹயபுசா "Bol d'Or" எடிஷன் மொத்தத்தில் 100 யூனிட்களே விற்பனை செய்யப்பட உள்ளன. இது பிரான்ஸ் நாட்டு சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

சுசுகி ஹயபுசா Bol d'Or லிமிடெட் எடிஷன் விலை 27 ஆயிரத்து 499 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 22 லட்சத்து 60 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது விற்பனை செய்யப்படும் சுசுகி ஹயபுசா ஸ்டாண்டர்டு மாடலை லிமிடெட் எடிஷன் விலை அதிகம் ஆகும். இந்தியாவில் சுசுகி ஹயபுசா மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 41 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News