கார்

2023 ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

Published On 2023-01-10 10:17 GMT   |   Update On 2023-01-10 10:17 GMT
  • ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் CNG என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
  • புதிய ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் மேம்பட்ட ஸ்டைலிங், இண்டீரியர் மற்றும் ஐந்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ஹூண்டாய் நிறுவனம் தனது ஆரா சப்காம்பேக்ட் செடான் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. மேலும் இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்பதிவு ஹூண்டாய் நிறுவன வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன் ஆரா ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்புறம் புது கிரில் மற்றும் பம்ப்பர் கொண்டிருக்கிறது. இந்த காரின் கிரில் தற்போது அகலமாகவும், அதிக செங்குத்தான வடிவம் கொண்டிருக்கிறது. இத்துடன் பாடி நிறத்திலான இன்சர்ட்கள், L வடிவம் கொண்ட எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள இரண்டாவது கிரில் தற்போது ஹெட்லேம்ப்களிடையே உள்ளது.

பின்புறம் ரியர் ஸ்பாயிலர் மற்றும் மூன்றாவது ஸ்டாப் லைட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹூண்டாய் ஆரா மாடல் - போலார் வைட், டைட்டன் கிரே, டைஃபூன் சில்வர், ஸ்டாரி நைட், டியல் புளூ மற்றும் ஃபியரி ரெட் என ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது. காரின் உள்புறம் டேஷ்போர்டு டிசைன் அதிகளவு மாற்றப்படவில்லை. எனினும், புது இருக்கை மேற்கவர் நிறங்கள், புது நிறம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் CNG ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 82 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 1.2 லிட்டர் CNG வெர்ஷன் 68 ஹெச்பி பவர், 95.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல்- E, S, SX, SX(O) மற்றும் SX+ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. பெட்ரோல் என்ஜின் அனைத்து வேரியண்ட்களும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் CNG ஆப்ஷன் S மற்றும் SX வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கிறது. இந்திய சந்தையில் புது ஆரா மாடல் மாருதி சுசுகி டிசையர், டாடா டிகோர் மற்றும் ஹோண்டா அமேஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News