கார்

இந்தியாவில் அறிமுகமான 2023 மாருதி இக்னிஸ்

Published On 2023-02-27 08:59 GMT   |   Update On 2023-02-27 08:59 GMT
  • மாருதி சுசுகி நிறுவனத்தின் 2023 இக்னிஸ் மாடல் பிஎஸ்6 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
  • என்ஜின் மட்டுமின்றி 2023 மாடலில் பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

மாருதி சுசுகி நிறுவனம் 2023 இக்னிஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய இக்னிஸ் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 82 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய மாடல் பிஎஸ்6 2 மற்றும் RDE விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. என்ஜின் மட்டுமின்றி இந்த மாடலில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போதைய இக்னிஸ் உடன் ஒப்பிடும் போது புதிய மாடலின் விலை ரூ. 27 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு மட்டும் பொருந்தும். விலை மாற்றத்தின்படி புதிய ஹேச்பேக் விலை ரூ. 5 லட்த்து 82 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 01 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

2023 மாருதி இக்னிஸ் மாடலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக: எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி ப்ரோகிராம் (ESP) மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு அம்சங்கள் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டு அம்சங்களாக உள்ளன.

புதிய மாருதி இக்னிஸ் மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட VVT பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News