கார்

கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி - ஹூண்டாய் அதிரடி

Published On 2022-10-19 10:33 GMT   |   Update On 2022-10-19 10:33 GMT
  • ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது.
  • சிறப்பு சலுகை மற்றும் பலன்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஹூண்டாய் கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. கோனா எலெக்ட்ரிக் எஸ்யுவி, ஆரா செடான், கிராண்ட் ஐ10 நியோஸ் மற்ரும் ஐ20 ஹேச்பேக் கார் மாடல்களுக்கு ஹூண்டாய் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

அக்டோபர் மாதத்திற்கான சலுகைகள் எக்சேன்ஜ் போனஸ், தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இதில் கோனா எலெக்ட்ரிக் மாடலுக்கு தள்ளுபடி சலுகை மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த காரை வாங்குவோருக்கு எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. கோனா எலெக்ட்ரிக் காரை வாங்கும் போது ரூ. 1 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலை வாங்கும் போது ரூ. 48 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த கார் மூன்று விதமான பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 100 ஹெச்பி பவர் வழங்கும் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 83 ஹெச்பி பவர் வழங்கும் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் ஆரா மாடலை வாங்குவோருக்கு ரூ. 33 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ஆரா மாடல் மாருதி சுசுகி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

ஹூண்டாய் ஐ20 வாங்கும் போது ரூ. 20 ஆயிரம் வரை பலன்கள் கிடைக்கும். இதில் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. தள்ளுபடி சலுகை ஐ20 மாடலின் மேக்ரனா மற்றும் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஐ20 மாடல் மாருதி சுசுகி பலேனோ, டாடா அல்ட்ரோஸ் மற்றும் டொயோட்டா கிளான்சா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News