கார்

ரூ. 11.49 லட்சம் விலையில் அறிமுகமான ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட்

Published On 2023-03-02 09:12 GMT   |   Update On 2023-03-02 09:12 GMT
  • ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
  • ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் பின்புறம் புதிய டிசைன் கொண்ட பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஐந்தாம் தலைமறை சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 49 ஆயிரம் என துவங்கி, அதிகபட்சம் ரூ. 20 லட்சத்து 39 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சிறு காஸ்மடிக் மாற்றங்கள், அதிக உபகரணங்கள், எண்ட்ரி லெவல் வேரியண்ட்கள் மற்றும் புதிய நிற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஹோண்டா சிட்டி மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காருக்கான ஆன்லைன் முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் ஆகும். ஆஃப்லைனில் முன்பதிவு செய்யும் போது ரூ. 21 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

 

ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடல் முழுமையாக சிறிதளவு காஸ்மடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் பம்ப்பர்கள் டுவீக் செய்யப்பட்டு, கிரில் மெல்லியதாகவும் க்ரோம் பார் வழங்கப்பட்டு இருக்கிறது. கிரில் டிசைன் மேம்படுத்தப்பட்டு, டாப் வேரியண்ட்களில் ஹனிகொம்ப் பேட்டன், பேஸ் வேரியண்ட்களில் செங்குத்தாக ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய எண்ட்ரி லெவல் வேரியண்ட் சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய SV வேரியண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மாடல் தற்போது- SV, V, VX மற்றும் ZX என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. SV வேரியண்ட் தவிர மற்ற வேரியண்ட்களில் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

 

உபகரணங்களை பொருத்தவரை சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ADAS அம்சங்களான- அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோனோமஸ் பிரேகிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த அம்சங்கள் சிட்டி ஹைப்ரிட் மாடலில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பெட்ரோல் மாடல்களிலும் இந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

டாப் எண்ட் மாடல்களில் ஆறு ஏர்பேக், டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், ரெயின் சென்சிங் வைப்பர்கள், ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

 

புதிய ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த என்ஜின் 121 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் அட்கின்சன் சைக்கிள் 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹைப்ரிட் என்ஜினுடன் eCVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த பிரிவு மாடல்களில் ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்ட ஒற்றை கார் மாடலாக புதிய ஹோண்டா சிட்டி உள்ளது. புதிய காரில் உள்ள பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின்கள் RDE மற்றும் E20 விதிகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்கோடா ஸ்லேவியா, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ், மாருதி சுசுகி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது. ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய வெர்னா மாடலை மார்ச் 21 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.

Tags:    

Similar News