கார்

விரைவில் அறிமுகமாகும் புது ஹோண்டா எஸ்யுவி

Published On 2022-10-29 09:09 GMT   |   Update On 2022-10-29 09:09 GMT
  • ஹோண்டா நிறுவனம் தனது புது எஸ்யுவி மாடலுக்கான வெளியீட்டு விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
  • புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் WR-V பெயரில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய எஸ்யுவி மாடலை அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் "WR-V" பெயரில் விற்பனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய எஸ்யுவி மாடல் 2021 நவம்பர் மாத வாக்கில் ஹோண்டா அறிமுகம் செய்த RS எஸ்யுவி கான்செப்ட் மாடலின் ப்ரோடக்‌ஷன் வெர்ஷன் ஆகும்.

புதிய கார் வெளியீட்டை உணர்த்தும் ஒரே டீசரை தான் ஹோண்டா இதுவரை வெளியிட்டு உள்ளது. இந்த டீசரின் படி புதிய ஹோண்டா எஸ்யுவி மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், இண்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்கள், ரூப் ரெயில்கள், டூயல் டோன் பெயிண்ட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும் என உறுதியாகி இருக்கிறது. வெளிநாடுகளில் இந்த கார் சோதனை செய்யப்பட்டது. அதில் புதிய கார் WR-V பெயரில் விற்பனைக்கு வரும் என தெரியவந்துள்ளது.

காட்சிப்படுத்தப்பட்ட மாடலில் பெரிய க்ரோம் ஸ்டட் செய்யப்பட்ட முன்புற கிரில், செங்குத்தான பாக் லேம்ப் ஹவுசிங், சில்வர் ஸ்கிட் பிளேட், பின்புறம் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் இண்டீரியர் மற்றும் என்ஜின் விவரங்கள் மர்மமாக வைக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த எஸ்யுவி மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூப் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் நவம்பர் 2 ஆம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் சர்வதேச வெளியீடு இந்தோனேசியாவில் நடைபெற இருக்கிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும்.

ஹோண்டா எஸ்யுவி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் அட்கின்சன் சைக்கிள், இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இவை இணைந்து 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இரு எலெக்ட்ரிக் மோட்டார்களில் ஒன்று அல்டர்நேட்டர் போன்று செயல்படும் நிலையில், மற்றொரு மோட்டார் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது. இதே என்ஜின் முன்னதாக ஹோண்டா சிட்டி மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News