செப்டம்பர் ரிலீசுக்கு ரெடியாகும் ஹூண்டாய் அல்கஸார்
- காரில் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
- மாடலில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக விலைகள் சற்று அதிகரிக்கலாம்.
ஹூண்டாய் இந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் அல்கஸார் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் க்ரெட்டா EV வருவதற்கு முன்பு அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் ஹூண்டாயின் பெரிய அறிமுகமாக இருக்கும்.
இந்தியாவில் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்டின் டெஸ்டிங் மூலம், ஹூண்டாய் SUVயின் முன்பக்கத்திலும் பின்புறத்திலும் ஸ்டைலிங் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளன.
அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் சில தனித்துவமான பிட்டிங்களை கொண்டிருக்கிறது. அவை க்ரெட்டாவை அல்காஸரில் இருந்து பிரித்து வைக்கும்.
ஸ்பிலிட் ஹெட்லேம்ப் வடிவமைப்பு ஒரே மாதிரியாக இருந்தாலும், கிரில் மற்றும் முன்புற பம்பரில் சில வேறுபாடுகள் இருக்கும். அலாய் வீல் டிசைன்கள் மற்றும் பக்கவாட்டு கிளாடிங்குகள் போன்றவை மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
க்ரெட்டா ஃபேஸ்பிலிட்டில் காணப்பட்ட இரட்டைத் திரை அமைப்புடன் புதிய தோற்றம் கொண்ட டேஷ்போர்டு வடிவமைப்பு, அல்காசரிலும் இடம்பெற்று இருக்கும். முந்தைய மாடலைப் போலவே, அல்கஸார் ஆறு மற்றும் ஏழு இருக்கை அமைப்புகளில் கிடைக்கும்.
இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. பெட்ரோல் பவர்டிரெய்ன் 160hp மற்றும் 253Nm டார்க் மற்றும் 6-ஸ்பீடு MT அல்லது 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
டீசல் மோட்டாரின் 116hp மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6MT மற்றும் 6AT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் வரவிருக்கும் பண்டிகை காலத்திற்கான ஹூண்டாய் புதிய மாடல் ஆகும். செப்டம்பர் மாதத்தில் இந்த காரின் விலை அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
மாடலில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக விலைகள் சற்று அதிகரிக்கலாம். தற்போதைய வெரியண்ட்டுகளின் விலை ரூ.16.78 லட்சம்-21.28 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.