null
இரண்டு CNG டேங்க் உடன் அறிமுகமான புது எக்ஸ்டர் - விலை எவ்வளவு தெரியுமா?
- இயந்திர ரீதியாக, புதிய CNG அமைப்புடன் கூடிய எக்ஸ்டர் 1.2-லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் கொண்டுள்ளது.
- ஒரு CNG சிலிண்டர் பொருத்துதல் போல் இல்லாமல், CNG டுயோ மாடலில் இரண்டு சிலிண்டர்கள் உள்ளன.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை போன்றே, இரட்டை CNG சிலிண்டர் டேங்க்-ஐ தனது வாகனத்தில் வழங்கியுள்ளது. இந்தியாவில் டாடா, மாருதி மற்றும் ண்டாய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சிஎன்ஜி-யில் இயங்கும் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன.
சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் இரட்டை சிஎன்ஜி டேன்க் கொண்ட வாகனத்தை அறிமுகம் செய்த நிலையில், தற்போது ஹூண்டாய் நிறுவனம் இதே போன்ற தொழில்நுட்பத்துடன், இரட்டை CNG-ஐ தனது எக்ஸ்டர் மாடலில் வழங்கி உள்ளது.
எக்ஸ்டர் CNG டுயோ என அழைக்கப்படும் புதிய காரின் ஆரம்ப விலை ரூ. 8.50 லட்சம் எக்ஸ்-ஷோரூமில் ஆகும். S, SX மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட SX நைட் ஆகிய 3 மாடல்களில் இந்த வசதி வழங்கப்படுகிறது.
இயந்திர ரீதியாக, புதிய CNG அமைப்புடன் கூடிய எக்ஸ்டர் 1.2-லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் கொண்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இருப்பினும், ஒரு CNG சிலிண்டர் பொருத்துதல் போல் இல்லாமல், CNG டுயோ மாடலில் இரண்டு சிலிண்டர்கள் உள்ளன. இது, 60 லிட்டர் CNG திறன் கொண்ட 27.1km/kg என்ற எரிபொருள் செயல்திறனை எக்ஸ்டர் வழங்குகிறது. புதிய சிஎன்ஜி டுயோவுடன், ஒற்றை டேங்க் எக்ஸ்டர் சிஎன்ஜி தொடர்ந்து விற்பனையில் இருக்கும்.
புதிய எக்ஸ்டர் CNG டுயோ குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தருண் கர்க் கூறுகையில், "ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் நிலையான மற்றும் புதுமையான இயக்க தீர்வுகளை வழங்க உறுதிபூண்டுள்ளது. அதிக எரிபொருள் திறன், போதிய பூட் ஸ்பேஸ் மற்றும் SUVயின் பல்துறை சலுகைகள் ஆகியவற்றுடன், எக்ஸ்டர் CNG டுயோ கார்பன் பாதிப்பை குறைக்கும்," என்று தெரிவித்தார்.
ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி டுயோ விலை விவரங்கள்:
ஹூண்டாய் எக்ஸ்டர் டுயோ S ரூ.8,50,300
ஹூண்டாய் எக்ஸ்டர் டுயோ SX ரூ.9,23,300
ஹூண்டாய் எக்ஸ்டர் டுயோ SX நைட் எடிஷன் ரூ.9,38,200
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.