கார்
null

அசத்தும் எக்ஸ்டர் நைட் எடிஷன்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?

Published On 2024-07-11 04:32 GMT   |   Update On 2024-07-11 05:58 GMT
  • எடிஷன் ஐந்து மோனோடோன் மற்றும் இரண்டு-டூயல் டோன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
  • வெளிப்புறம் ஸ்கிட் பிளேட்கள், 15-இன்ச் டைமன்ட் கட் அலோய் வீல்கள், ஹூண்டாய் லோகோ மற்றும் பேட்ஜ்கள், எக்ஸ்டர் நைட் எடிஷன் லோகோ உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் எக்ஸ்டரின் நைட் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை எக்ஸ்-ஷோரூமில் ரூ.8.38 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாயின் ஸ்பெஷல் எடிஷன் SX மற்றும் SX (O) வேரியன்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும்.

ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஆண்டுதான் எக்ஸ்டர்ரை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், புதிய எக்ஸ்டர் கார் இதுவரை 93,000 யூனிட்டுகள் விற்கப்பட்டுள்ளன. இந்த எடிஷன் ஐந்து மோனோடோன் மற்றும் இரண்டு-டூயல் டோன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

இதில் ஸ்டாரி நைட், அட்லஸ் ஒயிட், ரேஞ்சர் காக்கி, அபிஸ் பிளாக் ரூஃப் கொண்ட ரேஞ்சர் காக்கி, அபிஸ் பிளாக், ஷேடோ கிரே மற்றும் ஷேடோ கிரே வித் அபிஸ் பிளாக் ரூஃப் ஆகியவை அடங்கும்.

வெளிப்புறம் ஸ்கிட் பிளேட்கள், 15-இன்ச் டைமன்ட் கட் அலோய் வீல்கள், ஹூண்டாய் லோகோ மற்றும் பேட்ஜ்கள், எக்ஸ்டர் நைட் எடிஷன் லோகோ உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. இவை காருக்கு கவர்ச்சிகர தோற்றத்தை வழங்குகின்றன.

இது தவிர, இந்த எஸ்யுவியின் பம்ப்பர்கள், டெயில்கேட் மற்றும் முன்புற பிரேக் கேலிப்பர்களில் சிவப்பு நிற அக்சென்ட் செய்யப்பட்டு உள்ளது. உள்புறம் சிவப்பு மற்றும் கருப்பு நிற அக்சென்ட் பெறுகிறது. இதில் ஃபுட்வெல் லைட்டிங், மெட்டல் ஸ்கஃப் பிளேட்ஸ், ரெட் தையல் கொண்ட ஃபுளோர் மேட்ஸ் மற்றும் சீட்களுக்கு ரெட் நைட் எடிஷன் தீம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 83hp, 114Nm வெளிப்படுத்தும் 1.2-லிட்டர், நான்கு சிலிண்டர் NA பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News