null
2 CNG டேங்க் கொண்ட கிராண்ட் i10 நியோஸ் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
- இந்த கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- பூட் பகுதியில் போதுமான இடம் கிடைக்கும்.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் i10 நியோஸ் மாடலின் புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. புது வேரியண்ட் கிராண்ட் i10 நியோஸ் Hy CNG டுயோ என அழைக்கப்படுகிறது. இந்த மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 75 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
Hy CNG டுயோ ஏற்கனவே ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அமைப்பில் CNG டேங்க் இரண்டாக பிரிக்கப்பட்டு கீழ்புறமாக வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அதிகளவு இடத்தை அடைத்துக் கொள்ளாமல், பூட் பகுதியில் போதுமான இடம் கிடைக்கும்.
இந்த காரில் 1.2 லிட்டர் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 68 ஹெச்பி பவர், 95.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த காரில் CNG மோட் கார் சென்று கொண்டிருக்கும் போதுதான் இயக்க முடியும்.
மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த காரில் 6 ஏர்பேக், டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா, டே & நைட் ரியர்வியூ மிரர், எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
விலை விவரங்கள்:
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் HY CNG டுயோ மேகனா ரூ. 7 லட்சத்து 75 ஆயிரம்
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் HY CNG டுயோ ஸ்போர்ட்ஸ் ரூ. 8 லட்சத்து 30 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.