கார்

இந்திய வெளியீட்டுக்கு தயாராகும் நிசான் எக்ஸ் டிரெயில்

Published On 2024-07-19 08:18 GMT   |   Update On 2024-07-19 08:18 GMT
  • இந்தியாவில் மேக்னைட் மாடலுடன் விற்பனை செய்யப்பட உள்ளது.
  • இது Fully Loaded வேரியண்ட் ஆக இருக்கும்.

நிசான் நிறுவனம் சில தினங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்த எக்ஸ் டிரெயில் காரின் இந்திய வெர்ஷன் விவரங்களை தெரிவித்துள்ளது. மூன்றடுக்கு இருக்கை கொண்ட புது எஸ்யுவி மாடல் இந்தியாவில் மேக்னைட் மாடலுடன் விற்பனை செய்யப்பட உள்ளது.

தற்போது நிசான் நிறுவனம் மேக்னைட் மாடலை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த கார் ஒற்றை வேரியண்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. இது Fully Loaded வேரியண்ட் ஆக இருக்கும்.

புதிய எக்ஸ் டிரெயில் மாடல்: பியல் வைட், டைமண்ட் பிளாக் மற்றும் ஷேம்பெயின் சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கும். அளவீடுகளை பொருத்தவரை இந்த கார் 4680mm நீளம், 1840mm அகலம், 1725mm உயரம் கொண்டுள்ளது. இந்த காரின் வீல்பேஸ் 2705mm ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 210mm ஆக உள்ளது.

 


2024 நிசான் எக்ஸ் டிரெயில் மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 12 வோல்ட் மைல்ட் ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 160 ஹெச்.பி. பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் லிட்டருக்கு 13.7 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்கும் என்று தெரிகிறது.

இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 9.6 நொடிகளில் எட்டும் திறன் கொண்டுள்ளது. புதிய எக்ஸ் டிரெயில் மாடலில் ஸ்ப்லிட் ரக எல்இடி ஹெட்லேம்ப்கள், 20 இன்ச் மெஷின்டு அலாய் வீல்கள், முன்புற கதவில் ORVMகள், எல்இடி டெயில் லைட்கள், சில்வர் ரூஃப் ரெயில்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், ஷார்க் ஃபின் ஆன்டெனா, ரியர் வைப்பர் மற்றும் வாஷர் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News