மஹிந்திராவின் 5 டோர் கொண்ட தார் ராக்ஸ்: ஆகஸ்ட் 15-ல் அறிமுகம்
- ரூ. 15 லட்சம் தொடங்கி ரூ. 25 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்ப்பு.
- கூடுதலான இரண்டு கதவுகள் மற்றும் அதிகரித்த நீளம், வீல்பேஸ் ஆகியவற்றுடன் வடிவமைப்பில் புதுமை.
இந்தியர்களின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா தார் மாடல் கார்களை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் 5 டோர் கொண்ட புதிய வெர்ஷனை வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த வெர்ஷனுக்கு தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx) எனப் பெயர் வைத்துள்ளது.
தார் 3 டோர் வெர்ஷனை போலவே அதிக கவர்ச்சியான மற்றும் மிடுக்கான தோற்றத்தை கொண்டதாக இது காட்சியளிக்கின்றது. இதற்கேற்ப ஆறு ஸ்லாட்டுகளைக் கொண்ட புதிய கிரில் காரின் முன் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சமும், முன்பக்க பம்பரும் தார் ராக்ஸ்-க்கு வேற லெவல் அழகான பிம்பத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றன.
கூடுதலான இரண்டு கதவுகள் மற்றும் அதிகரித்த நீளம், வீல்பேஸ் ஆகியவற்றுடன் தார் ராக்ஸ் வடிவமைப்பிலும் நுட்பமான புதுமைகளை பெறுகிறது.
இன்ஜினைப் பொருத்தவரை 1.5 லிட்டர் டீசல், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் ஆகிய ஆப்ஷன்களே வழங்கப்பட இருக்கின்றது. மஹிந்திரா தார் ராக்ஸ் ரூ. 15 லட்சம் தொடங்கி ரூ. 25 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.