கார்

மஹிந்திரா XUV 3XO இந்திய வினியோகம் - லீக் ஆன புது தகவல்

Published On 2024-07-13 06:20 GMT   |   Update On 2024-07-13 06:20 GMT
  • காரின் பின்புறத்தில் எல்.இ.டி. லைட் பர், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.
  • மஹிந்திரா XUV 3XO மாடல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட XUV 3XO மாடல் இந்திய சந்தையில் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் இந்த மாடல் மே மாத இறுதியில் டெலிவரி செய்யத் தொடங்கப்பட்டது.

இந்த காரின் விலை ரூ. 7 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மஹிந்திரா XUV 3XO மாடல் முற்றிலும் புதிய டிசைன், அதிக அம்சங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட செயல்திறன் கொண்டிருக்கிறது.

XUV 3XO இன் மிட் மற்றும் டாப் எண்ட் மாடல்கள் விரைவில் வினியோகம் செய்யப்பட உள்ளன. இப்போது, என்ட்ரி லெவல் MX1 மாடல்கள் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் டெலிவரி செய்யப்பட இருக்கிறது.

புதிய மஹிந்திரா XUV 3XO மாடல் MX1, MX2, MX3 மற்றும் MX2 ப்ரோ, AX5, AX5L, AX7 மற்றும் AX7L போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. டிசைனை பொருத்தவரை இந்த மாடலில் C வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பிளாக்டு அவுட் கிரில், மெஷ் பேட்டன் மற்றும் மேம்பட்ட முன்புற பம்ப்பர் வழங்கப்படுகிறது.

காரின் பின்புறத்தில் எல்.இ.டி. லைட் பர், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் டெயில்கேட், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், ரியர் டிஃபாகர், அகலமான பம்ப்பர் மற்றும் புதிய XUV 3XO லெட்டரிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

உள்புறம் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் வழங்கப்படுகிறது. இந்த காரில் முற்றிலும் புதிய ஸ்டீரிங் வீல், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, லெதர் இருக்கைகள், ரிவைஸ்டு சென்டர் கன்சோல், ரியர் ஏ.சி. வெண்ட்கள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா XUV 3XO மாடல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News