கார்

தேசிய கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட மாருதி கார் - ரிசல்ட் எப்போ வருது தெரியுமா?

Published On 2024-07-27 06:49 GMT   |   Update On 2024-07-27 06:49 GMT
  • பாரத் என்சிஏபி (Bharat NCAP) நடத்திய கிராஷ் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
  • கிராண்ட் விட்டாராவின் 2 வேரியன்ட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கார் பயன்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபல நிறுவனமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி. இந்நிறுவனத்தின் எர்டிகா, ஃபிராங்க்ஸ், ஸ்விஃப்ட் மற்றும் பிரெஸ்ஸா, வேகன்ஆர் வரிசையில் சமீப காலத்தில் அதிகம் விற்பனை கார்களின் மைல்கல் சாதனையில் கிராண்ட் விட்டாரா இணைந்தது.

இதையடுத்து, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்களின் படி, மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, பிஎன்சிஏபி எனப்படும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) நடத்திய கிராஷ் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சோதனைகளின் அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சோதனை முடிவுகள் வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிராண்ட் விட்டாராவின் 2 வேரியன்ட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று டாப்-ஸ்பெக் மற்றொன்று மிட்-ஸ்பெக்.


Photo Courtesy: Safe Cars India


மாருதி கிராண்ட் விட்டாராவில் டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, எச்எஸ்ஏ, சரிசெய்யக்கூடிய சீட்-பெல்ட்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், வேக எச்சரிக்கை அமைப்பு, சீட் பெல்ட் நினைவூட்டல் அமைப்பு மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கை போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

இத்துடன் டூயல் ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, EPS, TPMS மற்றும் பலவற்றை உள்ளடக்கிய கூடுதல் அம்சங்களை உயர் வகைகளில் பெறலாம்.

Tags:    

Similar News