கார்

மாருதி ஜிம்னி இந்திய வினியோகம் - இணையத்தில் வெளியான சூப்பர் தகவல்!

Published On 2023-04-07 10:08 GMT   |   Update On 2023-04-07 10:08 GMT
  • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஜிம்னி மாடல் வினியோகம் பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.
  • இந்திய சந்தையில் புதிய மாருதி ஜிம்னி மாடல் இரண்டு வேரியண்ட்கள், ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது.

மாருதி சுசுகி ஜிம்னி மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து புதிய மாருதி ஜிம்னி 5-டோர் வேரியண்டிற்கான முன்பதிவு துவங்கியது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மாருதி சுசுகி நிறுவனம் புதிய ஜிம்னி மாடலை இந்தியாவில் மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.

புதிய மாருதி ஜிம்னி மாடல் இரண்டு வேரியண்ட்கள் மற்றும் சிஸ்லிங் ரெட், கிராணைட் கிரே, நெக்சா புளூ, புளூயிஷ் பிளாக், பியல் ஆக்டிக் வைட், சிஸ்லிங் ரெட் மற்றும் புளூயிஷ் பிளாக் ரூஃப், கைனடிக் எல்லோ மற்றும் பிளாக் ரூஃப் என மொத்தத்தில் ஏழு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

 

அம்சங்களை பொருத்தவரை 5-டோர் ஜிம்னி மாடலில் 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

மாருதி ஜிம்னி மாடலில் 1.5 லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 134 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் ஆல்க்ரிப் ப்ரோ சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி ஜிம்னி மாடலை வாங்க இதுவரை சுமார் 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். மாருதி ஜிம்னி மாடல் ஏற்கனவே விற்பனை மையங்களை வந்தடைய துவங்கிவிட்டன.

Tags:    

Similar News