கார்

CNG வசதியுடன் இந்திய வெளியீட்டுக்கு தயாராகும் மாருதி சுசுகி பலேனோ

Published On 2022-10-31 09:10 GMT   |   Update On 2022-10-31 09:10 GMT
  • மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களில் CNG கிட் வசதியை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • மாருதி கார்களை தொடர்ந்து நெக்சா பிராண்டு மாடல்களிலும் தற்போது CNG கிட் வழங்கப்பட உள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் பலேனோ மற்றும் XL6 கார்களில் CNG கிட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நெக்சா பிராண்டு மாடல்களில் CNG வசதி பெறும் முதல் கார் மாடல்களாக இவை இருக்கும். பலேனோ பிரீமியம் ஹேச்பேக் மற்றும் XL6 எம்பிவி மாடல்கள் ஒரே மாதிரியான பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது.

மேலும் அதிக கார்களில் CNG வசதியை வழங்கும் நோக்கில், மாருதி சுசுகி லிமிடெட் நிறுவனம் பலேனோ மற்றும் XL6 CNG மாடல்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. மாருதி சுசுகி நிறுவன வாகனங்களில் அதிக மைலேஜ் வழங்கும் திறன் இருப்பதே அதிக வாடிக்கையாளர்களை ஈட்ட முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இதுவரை மாருதி சுசுகி நிறுவனம் ஒன்பது கார்களில் CNG கிட் வசதியை வழங்கி இருக்கிறது.

இந்த வரிசையில் தற்போது பலேனோ மற்றும் 6-சீட்டர் எம்பிவி மாடலான XL6 இணைய இருக்கிறது. CNG பிரிவில் மாருதி சுசுகி நிறுவனம் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களும் CNG கிட் வசதியை வழங்கி வருகின்றன. வழக்கமான பெட்ரோல், டீசல் எரிபொருள்களுக்கு மாற்றாக குறைந்த விலையில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான தேர்வாக CNG விளங்குகிறது.

இவை மட்டுமின்றி CNG கிட் பொருத்தப்பட்ட கார்கள் வழக்கமான பெட்ரோல், டீசல் மாடல்களை விட அதிக மைலேஜ் வழங்கி வருகின்றன. ஏற்கனவே பல்வேறு கார்களில் CNG கிட் வழங்கி வருவதை அடுத்து பலேனோ மற்றும் XL6 மாடல்களில் CNG கிட் வழங்குவது ஆச்சரியமாக பார்க்கப்படவில்லை.

Tags:    

Similar News