null
பாதுகாப்பு டெஸ்டிங் செய்யப்பட்ட மாருதி எர்டிகா - எத்தனை மார்க் வாங்கியிருக்கு தெரியுமா?
- ஓட்டுநர் மற்றும் பயணிகளின் தலை மற்றும் கழுத்துக்கு நல்ல பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
- மேனுவல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் கார் பயன்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபல நிறுவனமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி. இந்நிறுவனத்தின் எர்டிகா மாடல் குளோபல் என்கேப் (Global NCAP) நடத்திய கிராஷ் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. விபத்துக்கான சோதனையில் மாருதி சுசுகி எர்டிகா 1 நட்சத்திரத்தைப் பெற்றுள்ளது.
இந்த எம்பிவி மாடல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது ஆகும். இதில் பாதுகாப்பிற்கு முன்புறம் இரண்டு ஏர்பேக்குகள், ESC, சீட்பெல்ட் நினைவூட்டல் மற்றும் லோட் லிமிட்டருடன் கூடிய சீட்பெல்ட் ப்ரீ-டென்ஷனர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின் வரிசையில் ISOFIX குழந்தை இருக்கை நங்கூரங்களையும் பெறுகிறது.
பெரியவர்களுக்கான பாதுகாப்பில் எர்டிகா மாடல் 23.63 புள்ளிகளையும், குழந்தைகள் பாதுகாப்பில் 19.40 புள்ளிகளையும் பெற்றுள்ளது. சோதனை முடிவுகளில், ஓட்டுநர் மற்றும் பயணிகளின் தலை மற்றும் கழுத்துக்கு நல்ல பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஃபுட்வெல் மற்றும் பாடிஷெல் ஆகியவை நிலையற்றவை என்றும் மேலும் ஏற்றுதல்களைத் தாங்கும் திறன் இல்லை என்றும் மதிப்பிடப்பட்டது.
எர்டிகாவின் உயர் வகைகளில் பக்கவாட்டு ஏர்பேக்குகள், உயரத்தை சரிசெய்யக்கூடிய முன் சீட்பெல்ட்கள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. எர்டிகா மாடலில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 102 ஹெச்பி பவர் மற்றும் 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் மேனுவல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.