கார்

9 ஆயிரம் கார்களை ரிகால் செய்யும் மாருதி சுசுகி - ஏன் தெரியுமா?

Published On 2022-12-07 10:05 GMT   |   Update On 2022-12-07 10:05 GMT
  • இந்திய சந்தையில் முன்னணி கார் உற்பத்தியாளராக இருக்கும் மாருதி சுசுகி தனது கார்களை ரிகால் செய்கிறது.
  • ரிகால் செய்யப்படும் கார்களில் உள்ள பிரச்சினைகள் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி சரி செய்யப்படுகிறது.

மாருதி சுசுகி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா, பிரெஸ்ஸா, எர்டிகா, XL6 மற்றும் சியாஸ் கார்களின் 9 ஆயிரத்து 125 யூனிட்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. நவம்பர் 2 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 28 ஆம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை மட்டும் ரிகால் செய்வதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட கார்களின் முதல் இருக்கைகளில் உள்ள சீட் பெல்ட்களில் குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த குறைபாடு மிகவும் அரிதான சம்பவங்களில் சீட் பெல்ட்-ஐ செயலிழக்க செய்து விடும். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த ரிகால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை மாருதி சுசுகி தனது அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் மூலம் தொடர்பு கொண்டு காரில் உள்ள பிரச்சினையை சரி செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட கார்கள் அனைத்தும் கூடுதல் கட்டணம் இன்றி முற்றிலும் இலவசமாக சரி செய்யப்பட இருக்கிறது. மாருதி சுசுகி மட்டுமின்றி டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாலிலும் இதே போன்று சீட் பெல்ட் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டொயோட்டா நிறுவனம் தனது ஹைரைடர் எஸ்யுவி-யின் 994 யூனிட்களை திரும்ப பெற்று இருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன் மாருதி சுசுகி நிறுவனம் தனது வேகன்ஆர், செலரியோ மற்றும் இக்னிஸ் மாடல்களை ரிகால் செய்து இருந்தது. அப்போது மூன்று கார்களிலும் ரியர் பிரேக் அசெம்ப்ளி பின் குறைபாடு கொண்டிருந்தது. இந்த கார்கள் ஆகஸ்ட் 3 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 01 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்படவில்லை.

Tags:    

Similar News