null
அதற்குள் இத்தனை லட்சங்களா? விற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி வேகன்ஆர்!
- மாருதி சுசுகி வேகன் ஆர் ஹேச்பேக் ரகத்தை சேர்ந்தது.
- மூன்றாவது நிதியாண்டில் இந்தியாவின் அதிகம் விற்பனையான காராக அதன் நிலையைத் தக்கவைத்துக் கொண்டது.
இந்தியாவில் கார் பயன்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி. இந்நிறுவனத்தின் எர்டிகா, ஃபிராங்க்ஸ், ஸ்விஃப்ட் மற்றும் பிரெஸ்ஸா வரிசையில் சமீப காலத்தில் அதிகம் விற்பனை கார்களின் மைல்கல் சாதனையில் வேகன்ஆர் இணைந்துள்ளது.
மாருதி நிறுவனம் அதன் சமீபத்திய வேகன்ஆர் மாடலை ஜனவரி 23, 2019 அன்று அறிமுகப்படுத்தியது. அப்போது முதல் பிரபல டால்-பாய் ஹேச்பேக் மாடலாக இருக்கும் வேகன்ஆர் விற்பனைில் 10 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை கடந்துள்ளது.
மாருதி சுசுகி வேகன் ஆர் ஹேச்பேக் ரகத்தை சேர்ந்தது. மாருதி சுசுகி வேகன் ஆர் காரின் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான விற்பனை குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
2024 நிதியாண்டில், வேகன் ஆர் மாடல் 2,00,177 யூனிட்கள் விற்பனையானது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது நிதியாண்டில் இந்தியாவின் அதிகம் விற்பனையான காராக அதன் நிலையைத் தக்கவைத்துக் கொண்டது.
இது மாருதி சுசுகியின் மொத்த பயணிகள் வாகன விற்பனையான 17.5 லட்சம் யூனிட்களில் 11 சதவீதமாக இருந்தது. தற்போதைய மாடலின் ஒட்டுமொத்த விற்பனை 10,06,413 யூனிட்டுகளாகக் கொண்டு, மில்லியன் (10 லட்சம்) எனும் மைல்கல்லைத் தாண்டியுள்ளது. 2019-இல் அறிமுகமான நிலையில், புது வேகன்ஆர் மாடல் 5.5 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது.
முதன்முதலில் 1999 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் வேகன் ஆர். ஒட்டுமொத்தத்தில் இந்த கார் இதுவரை சுமார் 32.1 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. ஹேட்ச்பேக் இந்த ஆண்டு தனது 25 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு மே 2023 மாதம் வேகன்ஆர் மாடல் 30 லட்சம் விற்பனையைத் தாண்டியது.