கார்

இணையத்தில் வெளியான ஹோண்டா எஸ்யுவி ஸ்பை படங்கள்

Published On 2023-02-20 10:21 GMT   |   Update On 2023-02-20 10:21 GMT
  • ஹோண்டா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய எஸ்யுவி மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது.
  • புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் கியா செல்டோஸ், கிராண்ட் விட்டாரா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் கடந்த மாதம் தனது புதிய எஸ்யுவி மாடலுக்கான டீசர்களை வெளியிட்டு இருந்தது. புதிய எஸ்யுவி மாடல் இந்த ஆண்டு கோடை காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என ஹோண்டா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. பயன்பாட்டு வாகனங்கள் பிரிவில் ஹோண்டா மீண்டும் களமிறங்குவது பற்றிய தகவல்கள் நீண்ட காலமாக வெளியாகி வருகின்றன.

தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை மட்டும் 50 சதவீத பங்குகளை பெற்று இருக்கின்றன. ஹோண்டா நிறுவனத்தின் WRV மாடலின் விற்பனை இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நிறுத்தப்பட இருக்கிறது.

 

முன்னதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் CRV மற்றும் BRV மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து இருக்கிறது. அந்த வகையில் ஹோண்டா தற்போது இரண்டு புதிய எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவை அமேஸ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

புதிய சப்-காம்பேக்ட் யுவி மாடல் PF-2 என்றும் மற்றொரு காம்பேக்ட் யுவி மாடல் PF2S என்றும் குறியீட்டு பெயர்களை கொண்டுள்ளன. சிறிய காரில் அமேஸ் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இரு கார்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புதிய ஹோண்டா எஸ்யுவி மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது.

ஸ்பை படங்களில் உள்ள எஸ்யுவி மாடலில் மல்டி-ஸ்போக் வீல்கள், சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள், முன்புறம் மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய எஸ்யுவி-இல் மெஷ்-டைப் லோயர் கிரில், சன்ரூஃப் இடம்பெற்று இருக்கிறது.

Photo Courtesy: AutoCarIndia

Tags:    

Similar News