கிராஷ் டெஸ்டில் 3 ஸ்டார் வாங்கிய புது ஸ்விஃப்ட் மாடல்
- முற்றிலும் புதிய ஸ்விப்ட் மாடலின் விலை ரூ. 6 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
- புதிய பெட்ரோல் என்ஜினுடன் இந்த காரில் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
யூரோ NCAP புதிய கிராஷ் சோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிய Suzuki Swift, 2024 Dacia Duster, புதிய Skoda Kodiaq போன்ற பல கார் மாடல்களின் சோதனை முடிவுகள் அடங்கியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் நான்காவது தலைமுறை ஸ்விஃப்ட்டின் சோதனை முடிவுகள் குறித்து பார்ப்போம்...
சோதனையில், 2024 ஸ்விஃப்ட் விபத்து சோதனையில் மூன்று நட்சத்திர மதிப்பீடு பெற்றது. இதில், வயது வந்தோர் பாதுகாப்பில் 67 சதவீதமும், குழந்தைகள் பாதுகாப்பில் 65 சதவீதமும், பாதுகாப்பு உதவியில் 62 சதவீதமும், பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனாளிகளுக்கு 76 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளது.
ஸ்விஃப்ட்டின் இந்த சோதனை செய்யப்பட்ட யூனிட்டில் உள்ள பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், சீட்பெல்ட் ப்ரீ-டென்ஷனர்கள் மற்றும் லோட் லிமிட்டர்கள் மற்றும் சீட்பெல்ட் நினைவூட்டல் அமைப்பு ஆகியவை அடங்கும். மேலும், இது இரண்டாவது வரிசையில் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கை ஆங்கரேஜ் மற்றும் ADAS வசதிகளை கொண்டுள்ளது. முன்பக்க ஆஃப்செட் சோதனையில் காரினல் பயணிகள் அமரும் பெட்டி நிலையானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் விற்கப்படும் ஸ்விஃப்ட் ஜப்பானில் தயாரிக்கப்பட்டது, எனவே இந்தியாவில் விற்கப்படும் ஸ்விஃப்ட் உடன் எந்த தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ESP, HSA, பின்புற பார்க்கிங் சென்சார்கள், சீட்பெல்ட் நினைவூட்டல் அமைப்பு, வேக எச்சரிக்கை அமைப்பு, Isofix குழந்தை இருக்கை ஆங்கரேஜ் மற்றும் சில கூடுதல் அம்சங்களை இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்ட் கொண்டுள்ளது. சுசுகி கனெக்ட் தொழில்நுட்பம். வரவிருக்கும் மாதங்களில் புதிய ஸ்விஃப்ட் BNCAP-ல் சோதிக்கப்படுமா என்பதைப் பார்க்க வேண்டும்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஸ்விப்ட் மாடல் இந்தியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய ஸ்விப்ட் மாடலின் விலை ரூ. 6 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய பெட்ரோல் என்ஜினுடன் இந்த காரில் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
டிசைனை பொருத்தவரை 2024 ஸ்விப்ட் மாடலில் முற்றிலும் புதிய பம்ப்பர்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கிளாஸ் பிளாக் முன்புற கிரில், எல்.இ.டி. ஃபாக் லைட்கள், 15 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள், புதிய எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. 2024 ஸ்விப்ட் மாடல் லஸ்டர் புளூ மற்றும் நோவல் ஆரஞ்சு என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.