கார்

கார் மாடல்கள் விலையை திடீரென மாற்றிய டாடா மோட்டார்ஸ்

Published On 2022-11-10 10:01 GMT   |   Update On 2022-11-10 10:01 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
  • கார் மாடல்களின் புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டன. விலை மாற்றம் பற்றிய விவரங்களை பார்ப்போம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ஒட்டுமொத்தமாக உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு நவம்பர் 7 ஆம் தேதி அமலுக்கு வந்துவிட்டது. இம்முறை டாடா கார்களின் விலை 0.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

விலை உயர்வின் படி டாடா ஹேரியர் மாடல் விலை தற்போது ரூ. 30 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து டாடா சபாரி மாடலின் விலை ரூ. 20 ஆயிரமும், நெக்சான் மாடல் விலை ரூ. 18 ஆயிரமும் உயர்த்தப்பட்டுள்ளது. டாடா அல்ட்ரோஸ், டிகோர் மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

ஹேச்பேக் மாடலான டாடா டியாகோ விலை தற்போது ரூ. 8 ஆயிரம் உயர்ந்து இருக்கிறது. டாடா பன்ச் விலை ரூ. 7 ஆயிரம் அதிகரித்துள்ளது. இவை தவிர டாடா நெக்சான் EV மற்றும் டிகோர் EV மாடல்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் 50 ஆயிரமாவது யூனிட்டை வெளியிட்டது. டாடா எலெக்ட்ரிக் வாகனங்களில் 50 ஆயிரமாவது யூனிட்டாக நெக்சான் EV மாடல் அந்நிறுவனத்தின் பூனே ஆலையில் இருந்து வெளியிட்டது. இந்த கார் கிளேசியர் வைட் நிறம் கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News