இது புதுசு

விரைவில் இந்தியா வரும் மஹிந்திரா XUV400

Published On 2022-12-31 11:44 GMT   |   Update On 2022-12-31 11:44 GMT
  • மஹிந்திரா நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் கார் மாடல் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • புதிய மஹிந்திரா எலெக்ட்ரிக் காரின் விலை விவரங்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்பட இருக்கிறது.

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் மஹிந்திரா XUV400 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் ஆகும். மஹிந்திராவின் புதிய XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி விலை மற்றும் வெளியீடு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த காரின் டெஸ்ட் டிரைவ் விரைவில் துவங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து வினியோகம் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்திலோ துவங்கும்.

புதிய மஹிந்திரா XUV400 மாடல் பேஸ், EP மற்றும் EL என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 17 லட்சத்தில் துவங்கும் என கூறப்படுகிறது. இந்த கார் டாடா நெக்சான் EV மற்றும் எம்ஜி ZS EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். மஹந்திரா XUV400 மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 8.3 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 150 கிலோமீட்டர்களாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த மாடலில் 39.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பேட்டரி பேக் மற்றும் ஒற்றை மோட்டார் பவர்டிரெயின் 148 ஹெச்பி பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 456 கிலோமீட்டர் வரை செல்லும். இதனுடன் 3.3 கிலோவாட்/16A ஹோம் சார்ஜர், 7.2 கிலோவாட்/32A ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா XUV400 காரை DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்ய 50 நிமிடங்களே ஆகும். ஹோம் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்ய 13 மணி நேரங்கள் ஆகும். இந்த கார் ஃபன், ஃபாஸ்ட் மற்றும் ஃபியர்லெஸ் என மூன்று வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த காரில் ஏராளமான அம்சங்கள், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், சன்ரூஃப், புஷ் பட்டன் ஸ்டார்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News