சிரஞ்சீவி நடிப்பில் இரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் படம் - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
- தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.
- சிரஞ்சீவியின் புதிய பட அப்டேட் வெளியீடு.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி. 'விஸ்வம்பரா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சிரஞ்சீவி அடுத்ததாக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தின் போஸ்டரை நானி மற்றும் சிரஞ்சீவி தங்களது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தனர். இந்தப் படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படம் என்பதை தெளிவாக உணர்த்தும் வகையில், இந்தப் படத்தின் போஸ்டர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், போஸ்டரில், வன்முறையில் தான் இவன் அமைதியை தேடிக் கொள்கிறான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இரத்தம் சிந்தும் கை மற்றும் சிவப்பு நிறம் காட்சியளிக்கிறது.
இந்தப் படத்தை எஸ்எல்வி சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகுரி தயாரிக்க, நடிகர் நானியின் அனானிமஸ் புரொடக்ஷன்ஸ் வழங்குகிறது. இந்தப் படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா தற்போது நானி நடிக்கும் "தி பாரடைஸ்" திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.