சினிமா செய்திகள்
null

ரஞ்சித்துக்கு இனிமேல் நான்தான்..- சந்தோஷ் நாராயணன்

Published On 2024-12-04 16:01 GMT   |   Update On 2024-12-04 16:02 GMT
  • 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' படம் வரும் 13-ந்தேதி வெளியாகிறது.
  • சூது கவ்வும்-2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான 'சூது கவ்வும்' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது.

'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ், ஹரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி.குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.

'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' படம் வரும் 13-ந்தேதி வெளியாகிறது.

இந்நிலையில், சூது கவ்வும்-2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது, வெளியிடப்பட்ட டிரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

விழாவில், இயக்குனர்கள் பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அப்போது பேசிய சந்தோஷ் நாராயணன், "ரஞ்சித்க்கு இனிமேல் இடிச்சுத் தள்ளிட்டு நான்தான் மியூசிக் பண்ணுவேன். வேற யாருக்கும் இத விடமாட்டேன். இது ஒரு கட்டளை. சூது கவ்வும் படக்குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்றார்.

முன்னதாக, இயக்குனர் பா.ரஞ்சித்திற்கும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் மனக்கசப்பு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News