சினிமா செய்திகள்

ஸ்பைடர்மேன் 4 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published On 2024-10-26 15:30 GMT   |   Update On 2024-10-26 15:30 GMT
  • ஸ்பைடர் மேன் 4 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக டாம் ஹாலண்ட் தெரிவித்துள்ளார்.
  • ஸ்பைடர் மேன் 4 படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கவுள்ளது

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட். அன்சார்டட், டெவில் ஆல் த டைம், தி இம்பாசிபிள் உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், ஸ்பைடர்மேன் வரிசை படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். இவருக்கு இந்தியா உட்பட உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், டாம் ஹாலண்ட் 'ஸ்பைடர் மேன் 4 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் கூறியிருந்தார்.

ஸ்பைடர் மேன் 4 படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என்றும் அதற்காக ஆவலடன் காத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகவுள்ள ஸ்பைடர் மேன் 4ஆவது பாகம் 2026-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஸ்பைடர் மேன் படத்தின் 3 ஆம் பாகம் உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News