சினிமா செய்திகள்

`நீங்க கண்டிப்பா அரசியலுக்கு வரணும் சூர்யா' - கங்குவா இசைவெளியீட்டு விழாவில் போஸ் வெங்கட்

Published On 2024-10-26 15:41 GMT   |   Update On 2024-10-26 15:41 GMT
  • சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
  • திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்பொழுது சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்று வருகிறது.

சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

திரைப்படத்தின் இரண்டாம் பாடலான யோலோ பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூர்யா இரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திஷா பதானி , பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்பொழுது சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்று வருகிறது. திரைத்துறையில் உள்ள பலரும், படத்தில் நடித்த நடிகர்களும் இவ்விழாவில் பங்கேற்றுள்ளனர்.

இவ்விழாவில் நடிகர் போஸ் பேசியதாவது " படத்திற்கு வாய்ப்பளித்த சிவா சாருக்கு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவருக்கு மனமார்ந்த நன்றிகள், தன்னுடைய நடித்த சக நடிகர்களுக்கு நன்றியை தெரிவித்தார். அப்பொழுது அவர் அரசியலைப்பற்றி பேச ஆசைப்படுகிறேன். ஒரு சூப்பர் ஸ்டார் தலைவன் ரசிகர்களை எப்படி வழிநடத்த வேண்டும் உங்களைப் போல வழி நடத்த வேண்டும். தர்மம் செய்ய சொல்லி கொடுக்க வேண்டும், உதவி செய்ய சொல்லி கொடுக்க வேண்டும், நீங்க எப்படி வாழனும் சொல்லி கோடுத்துரனும், தன்னுடை பிரச்சனைய எப்படி பாதுக்கனும்னு சொல்லி கொடுத்திரனும், அதுக்கெல்லாம் மீறி படிப்ப கொடுத்திரனும். இதுக்கெல்லாம் அடுத்துதான் அரசியலுக்கு வரனும், ஒரு தலைவன் என்ன வேலை செய்கிறான்னு என முக்கியம் இல்ல. நடிகராக இருக்கலாம், பேச்சாளராக இருக்கலாம், இயக்குனராக இருக்கலாம், எழுத்தாளராக இருக்கலாம், ஆனால் அந்த தலைவனோட அடித்தளம் ரசிகனை முட்டாளாக வைத்திருப்பதல்ல. அறிவாளியாக வைத்து இருக்க வேண்டும் . அப்படிப்பாத்தா நீங்க அரசியலுக்கு வரணும். கமல் சாருக்கு பிறகு சிறந்த நடிகராக இருக்குறீர்கள். மனசுக்கு திருப்திகரமான படங்களை நடித்து முடித்து விட்டு கட்டாயமாக நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்" என கூறினார்.

நாளை விக்கரவாண்டியில் நடிகர் விஜய்யின் முதல் கட்சி மாநாடு நடைப்பெறுகிறது. இதையொட்டி போஸ் வெங்கட் இப்படி பேசியது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இவர் மறைமுகமாக விஜய்யை சாடினாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த காணொலி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News