சினிமா செய்திகள்
பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்
- கன்னடத்தில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மன்தீப் ராய்.
- மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மன்தீப் இன்று காலமானார்.
கன்னட திரையுலகில் காமெடி நடிகராக அறியப்பட்டவர் மன்தீப் ராய் வயது 74. கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூருவுக்கு புலம் பெயர்ந்த அவர், பின்பு கன்னட திரைத்துறையில் நடிக்க தொடங்கினார். இதுவரை அவர் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். அவற்றில் புஷ்பக விமானம், நாகரஹாவு, ஆப்த ரக்சகா, குரிகலு சார் குரிகலு உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு பெற்றவை.