கிரிக்கெட் (Cricket)

156.26 கி.மீ. வேகம்... அதிவேக டெஸ்ட் ஓவர் - தனது சாதனையை தானே முறியடித்த மார்க் வுட்

Published On 2024-07-20 05:48 GMT   |   Update On 2024-07-20 05:50 GMT
  • இங்கிலாந்தில் அதிவேகமாக டெஸ்ட் ஓவரை வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை மார்க் வுட் படைத்துள்ளார்.
  • முதல் ஓவரில் படைத்த சாதனையை தனது 2 ஆவது ஓவரில் மார்க் வுட் முறியடித்தார்.

வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

இப்போட்டியில், பந்துவீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் மார்க் வுட் அதிவேக ஓவரை வீசி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் அதிவேகமாக டெஸ்ட் ஓவரை வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய மிகைல் லூயிஸுக்கு தனது முதல் ஓவரை வீசினார் மார்க் வுட். முதல் பந்தை 151.1 கிமீ வேகத்தில் அவர் வீசினார். 2 ஆவது பந்தை 154. 65 கிமீ வேகத்திலும் மூன்றாவது பந்தை 152.88 கிமீ வேகத்திலும் 4 ஆவது பந்தை 148.06 கிமீ வேகத்திலும் 5 ஆவது பந்தை 155.30 கிமீ வேகத்திலும் கடைசி பந்தை 153.20 கிமீ வேகத்திலும் வீசினார்.

இதன் மூலம் இங்கிலாந்தில் அதிவேகமாக ஓவரை வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

மார்க் வுட் தனது 2 ஆவது ஓவரை முதல் ஓவரை விடவும் அதிவேகத்தில் வீசினார். அந்த ஓவரில் 152, 149.66, 152, 154.49, 156.26, 151.27 கிமீ வேகத்தில் அவர் வீசினார். இதன் மூலம் முதல் ஓவரில் படைத்த சாதனையை தனது 2 ஆவது ஓவரில் மார்க் வுட் முறியடித்தார். 

Tags:    

Similar News