கிரிக்கெட் (Cricket)

4 ஓவர்களும் மெய்டென், 3 விக்கெட்டுகள்.. "Fantastic" பெர்குசன் அசத்தல்

Published On 2024-06-18 01:29 GMT   |   Update On 2024-06-18 01:29 GMT
  • டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெற்றியுடன் விடைபெற்றது.
  • பெர்குசன் டி20 கிரிக்கெட்டில் அபார சாதனை படைத்தார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறி விட்டன. அந்த வகையில், இந்த போட்டி தொடரில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

சம்பிரதாய அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெற்றியுடன் விடைபெற்றது.

 


இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் லாக்கி பெர்குசன் டி20 கிரிக்கெட்டில் அபார சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்கள் பந்துவீசிய பெர்குசன் அவை அனைத்தையும் மெய்டென்களாக (ரன் ஏதும் கொடுக்காமல்) வீசினார். நான்கு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

முன்னதாக கனடா அணி கேப்டன் சாத் பின் சஃபார் டி20 கிரிக்கெட்டில் தான் வீசிய நான்கு ஓவர்களில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அந்த வகையில், டி20 கிரிக்கெட்டில் நான்கு ஓவர்களையும் மெய்டென்களாக வீசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெர்குசன் பெற்றிருக்கிறார். 

Tags:    

Similar News