கிரிக்கெட் (Cricket)

ஒரே ஓவரில் 43 ரன்கள் : மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து பவுலர் ஆலி ராபின்சன்

Published On 2024-06-26 14:19 GMT   |   Update On 2024-06-26 14:19 GMT
  • ஆலி ராபின்சன் நோ பால் ஆக வீசிய மூன்று பந்துகளிலும் லூயிஸ் கிம்பர் சிக்ஸர் விளாசியுள்ளார்.
  • இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ள ராபின்சன் 76 டெஸ்ட் விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

அதில், சசெக்ஸ் - லீசெஸ்டர்ஷையர் அணிகள் மோதின. அப்போட்டியில் , லீசெஸ்டர்ஷையர் வீரர் லூயிஸ் கிம்பர், ஆலி ராபின்சன் வீசிய ஒரே ஓவரில் 5 சிக்ஸர், 3 பவுண்டரி, ஒரு சிங்கிள் உடன் 43 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்துள்ளார்.

ஆலி ராபின்சன் நோ பால் ஆக வீசிய மூன்று பந்துகளிலும் லூயிஸ் கிம்பர் சிக்ஸர் விளாசியுள்ளார்.

லீசெஸ்டர்ஷையரின் இரண்டாவது இன்னிங்ஸில் எட்டாவதாக இறங்கிய 27 வயதான கிம்பர் 62 பந்துகளில் தனது இரண்டாவது கவுண்டி சாம்பியன்ஷிப் சதத்தை எட்டினார். 18 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 191 ரன்கள் எடுத்துள்ளார்.

இதன்மூலம் கவுண்டி சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்களை விட்டு கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் படைத்தார்.

இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ள ராபின்சன் 76 டெஸ்ட் விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீர் வொர்செஸ்டர்ஷயர் அணிக்காக ஒரு ஓவரில் 38 ரன்களை விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News