கிரிக்கெட் (Cricket)
null

டி20 கிரிக்கெட்டில் முதல் அணியாக மோசமான சாதனை படைத்த அமெரிக்கா

Published On 2024-06-13 13:07 GMT   |   Update On 2024-06-13 13:07 GMT
  • அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
  • இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்காவுக்கு பெனால்டி ரன்கள் விதிக்கப்பட்டது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய அமெரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியின் போது அமெரிக்க அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக கள நடுவர்கள் அறிவித்தனர். ஆனால் இதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர். ஆனால் சமீபத்தில் சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்டாப் கிளாக் முறையை ஐசிசி அறிமுகம் செய்தது. இந்த விதியின் படி ஓவர்கள் வீசப்படும் நேரம், ஆட்ட நேரங்களைத் துல்லியமாகக் கணக்கிட முடியும். இந்த ஸ்டாப் கிளாக் முறையை ஐசிசி கட்டாயமாக்கியுள்ளது.

இந்தப் புதிய விதிமுறைப்படி ஒரு ஓவருக்கும் இன்னொரு ஓவருக்கும் இடையேயான இடைவெளி 60 நொடிகளுக்கு மிகக் கூடாது, அதாவது ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை 60 நொடிகளுக்குள் பந்துவீச்சாளர் ஓவரை வீசத் தொடங்கி விட வேண்டும். இதனை தெளிவுப்படுத்தும் விதமாக மைதானத்தில் உள்ள பெரிய திரையில் 60 முதல் பூஜ்ஜியம் வரை எண்ணும் கடிகாரம் ஸ்கீரினில் காட்டப்படும். இந்த நேரக்கட்டுப்பாட்டை 2 முறைக்கு மேல் மீறினால் பந்துவீச்சு அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்படும்.

அதாவது பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் போனஸாக கொடுக்கப்படும். இந்த விதியின் படிதான் தற்போது அமெரிக்கா அணிக்கு 5 ரன்களை பெனால்டியாக கொடுத்துள்ளது. முன்னதாக போட்டியின் போது கள நடுவர்கள் அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸை இரண்டு முறை எச்சரித்தும் இத்தவறை அமெரிக்க அணி மீண்டு செய்துள்ளது. அதன் பிறகே அமெரிக்காவுக்கு பெனால்டி ரன்களை விதித்தனர். இதன்மூலம் டி20-யில் முதல் அணியாக பெனால்டி ரன்கள் விதித்த அணியாக அமெரிக்கா மோசமான சாதனையை படைத்துள்ளது.

Tags:    

Similar News