ஆன்டிகுவா டெஸ்ட் கிரிக்கெட் போட்டி- 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி
- வங்காளதேசம் அணி 2வது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- வெஸ்ட் இண்டீஸ் அணியின் கீமர் ரோச் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஆன்டிகுவா:
வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16 ஆம் தேதி ஆன்டிகுவா மைதானத்தில் தொடங்கியது இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய வங்காளதேசம் அணி 2-வது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 5 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும், கைல் மேயர்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணி 9 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்திருந்தது.
நான்காம் நாளான இன்று ஜான் கேம்ப்பெல் - பிளாக்வுட் ஜோடி மேலும் விக்கெட்டை பறிகொடுக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 88 ரன்கள் அடித்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.