ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை- இந்தியா முதலில் பேட்டிங்
- இந்திய அணியில் தீபக் ஹூடா, ரவி பிஸ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் அணியில் ஷாநவாஸ் தஹானிக்கு பதிலாக முகமது ஹஸ்னைனுக்கு வாய்ப்பு
துபாய்:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச முடிவு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
பாகிஸ்தான் அணியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானிக்கு பதிலாக முகமது ஹஸ்னைனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியில் செய்யப்பட்ட மாற்றத்திற்கு ஏற்ப இந்திய அணியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்பியிருக்கிறார். தீபக் ஹூடா, ரவி பிஸ்னோய் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஜடேஜா, ஆவேஷ் கான், கார்த்திக் ஆகியோர் இடம்பெறவில்லை.