ஆசிய கோப்பை 2023 - இந்தியா, பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்து
- முதலில் ஆடிய இந்தியா 266 ரன்கள் சேர்த்தது.
- இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அரை சதமடித்தனர்.
பல்லேகலே:
ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய இஷான் கிஷன், ஹர்திக் பான்டியா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இஷான் கிஷன் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 82 ரன்னும், ஹர்திக் பான்டியா 87 ரன்னும் குவித்து அசத்தினர்.
பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷகீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 267 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி என்ற நிலையில் மழை குறுக்கிட்டது. தொடர் மழையால் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.