கிரிக்கெட் (Cricket)
ஆசிய கோப்பை: இலங்கை அணிக்கு எதிராக 183 ரன்கள் குவித்தது வங்காளதேசம்
- வங்காளதேச அணியில் அதிகபட்சமாக ஆசிப் உசைன் 39 ரன்கள் விளாசினார்.
- இப்போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.
துபாய்:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வங்காளதேசம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.
அதிரடியாக ஆடிய ஆசிப் உசைன் 22 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 39 ரன்கள் விளாசினார்.. மெகிடி ஹசன் 38 ரன்கள், மஹ்முதுல்லா 27, சாகிப் அல் ஹசன் மற்றும் மொசாடெக் தலா 24 ரன்கள் அடித்தனர். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது. இப்போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.