ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் இந்தியர்களின் ஆதிக்கம் - வெளியான அதிர்ச்சி தகவல்
- 2018-19 ஆண்டில் ஸ்மித் என்கிற குடும்ப பெயரை சிங் என்கிற குடும்ப பெயர் தாண்டியது
- ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தற்போது தெற்காசிய வம்சாவளியை சேர்ந்த 70,000 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இனி இந்தியர்களே அதிகம் இடம் பெறப் போகிறார்கள் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் அதிக அளவில் கிரிக்கெட் ஆடி வருவதாக குறிப்பிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள "Play HQ" என்ற செயலி ஒன்று உள்ளது.
அதில், 2023-24-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளில் பதிவு செய்யப்பட்ட வீரர்களில் 4262 பேர் சிங் என்கிற குடும்ப பெயர்களை கொண்டுள்ளனர். இதற்கு அடுத்து, ஸ்மித் என்கிற குடும்ப பெயரை 2,364 பேர் கொண்டுள்ளனர். படேல் என்கிற குடும்ப பெயரை 2323 பேர் கொண்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் கணிசமானோர் ஸ்மித் என்கிற குடும்ப பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில், ஸ்மித் என்கிற குடும்ப பெயரை விட சிங் என்கிற குடும்ப பெயர் கொண்டோர் ஆஸ்திரேலிய அணியில் அதிகம் இடம் பிடித்துள்ளனர்.
2018-19 ஆண்டில் ஸ்மித் என்கிற குடும்ப பெயரை சிங் என்கிற குடும்ப பெயர் தாண்டியது. அன்றிலிருந்து இப்போது வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சிங் பெயர் கொண்டவரே அதிகமாக உள்ளனர்.
சர்மா, கான், குமார் ஆகிய இந்திய வம்சாவளி குடும்ப பெயர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பதிவு செய்யப்பட்ட முதல் 16 பெயர்களில் இடம் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தற்போது தெற்காசிய வம்சாவளியை சேர்ந்த 70,000 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் முதல்தர, ஆண்கள் மற்றும் பெண்கள் பிக் பாஷ் லீக்கில் (BBL) கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு 100 வீரர்களில், தெற்காசிய வம்சாவளியினரின் பிரதிநிதித்துவம் 4.2 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.