கிரிக்கெட் (Cricket)
null

எங்களது யுக்தி இந்தியாவில் சோதிக்கப்படும்- மெக்கல்லம்

Published On 2024-01-24 00:46 GMT   |   Update On 2024-01-24 00:57 GMT
  • இந்த டெஸ்ட் போட்டி எத்தனை நாள் நீடிக்கும் என்று எனக்கு தெரியாது.
  • ஆனால் இரு அணிகளும் தங்களுக்கு உரிய ஸ்டைலில் விளையாடுவார்கள்.

இந்தியாவுக்கு வந்துள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில் எங்களது யுக்தி இந்தியாவில் சோதிக்கப்படும் என இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரண்டன் மெக்கல்லம் கூறியதாவது:-

இந்திய தொடர் முழுவதும் சுழற்பந்து வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும். நான் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்றபோது எங்களால் முடிந்த வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ரசிகர்களை குதூகலப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அதுவே வெற்றியையும் தேடித் தந்தது.

எங்களது அதிரடி பேட்டிங்கை, இந்தியாவுக்கு எதிராக அதுவும் இந்திய மண்ணில் சோதிப்பதை விட ஏதேனும் சிறப்பு இருக்கிறதா என்ன? இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் பார்ப்பார்கள். எனவே இது எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும். இந்த டெஸ்ட் போட்டி எத்தனை நாள் நீடிக்கும் என்று எனக்கு தெரியாது.

ஆனால் இரு அணிகளும் தங்களுக்கு உரிய ஸ்டைலில் விளையாடுவார்கள். பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிய ஆஷஸ் கிரிக்கெட் போல் இந்த தொடரும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு போட்டியிலும் 20 விக்கெட்டுகளை எடுப்பது மற்றும் எதிரணியைவிட குறைந்தது 1 ரன்னாவது கூடுதலாக எடுப்பது வெற்றியின் சாரம்சமாகும். எங்களது யுக்தி இந்த தொடரில் பரிசோதிக்கப்படும். இதுவே எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.

இவ்வாறு மெக்கல்லம் கூறினார்.

Tags:    

Similar News