கிரிக்கெட் (Cricket)

புதிய கேப்டனாக வார்னர் நியமனம்: துணை கேப்டனாக இந்திய வீரர் தேர்வு- டெல்லி அணியின் அதிகாரபூர்வ அறிவிப்பு

Published On 2023-03-16 06:22 GMT   |   Update On 2023-03-16 06:22 GMT
  • துணை கேப்டனாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த சீசனில் ரிஷப் பந்திற்கு பதிலாக வார்னர் கேப்டனாக செயல்பட உள்ளார் என டெல்லி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

2023 ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் டெல்லி அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வந்தார். அவர் கடந்த ஆண்டு டிசம்பரில் கார் விபத்தில் சிக்கி குணமடைந்து வருவதால் இந்த சீசனில் ரிஷப் பந்திற்கு பதிலாக வார்னர் கேப்டனாக செயல்பட உள்ளார் என டெல்லி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் துணை கேப்டனாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அதில் டேவிட் வார்னர், அக்சர் படேல் இந்த இருவரின் தலைமையில் இந்த #IPL2023 சத்தமாக கர்ஜிக்க தயாராக உள்ளது என்று தலைப்பிட்டிருந்தது.

வார்னர் தனது ஐபிஎல் வாழ்க்கையை 2009-ல் டெல்லி உரிமையுடன் (அப்போது டெல்லி டேர்டெவில்ஸ்) தொடங்கினார். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மாறினார். அவர் 2016 -ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றினார்.

போட்டியின் கடந்த பதிப்பில், வார்னர் 12 போட்டிகளில் கேபிடல்ஸ் அணிக்காக 150.62 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் 432 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் அவர் ஐந்து அரை சதங்களை அடித்தார்.

Tags:    

Similar News