கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 100/2
- ஜாக் கிராலி 71 பந்தில் 61 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
- குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று இமாச்சல பிரதேசம் தரம்சாலாவில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் அறிமுகம் ஆனார். பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பினார்.
ஜாக் கிராலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி பும்ரா- சிராஜ் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடித்து ரன்கள் சேர்த்தது. இதனால் இந்த ஜோடி 50 ரன்களை தாண்டி விளையாடியது. அணியின் ஸ்கோர் 64 ரன்னாக இருக்கும்போது பென் டக்கெட் 27 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஒல்லி போப் நீண்ட நேரம் களத்தில் நிற்கவில்லை. அவரை 11 ரன்னில் குல்தீப் யாதவ் வெளியேற்றினார். அத்துடன் முதல் நாள் உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது இங்கிலாந்து 25.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஜாக் கிராலி பாஸ்பால் ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் 64 பந்தில் 9 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். தற்போது 71 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 61 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.