null
களத்தில் டோனி கெட்ட வார்த்தை பயன்படுத்துவார்- உண்மையை போட்டுடைத்த இஷாந்த் சர்மா
- ஒரு டெஸ்ட் போட்டியின் போது நான் த்ரோவை சரியாக அடிக்காததால் அவர் ஆத்திரமடைந்தார்.
- ஐ.பி.எல் போட்டியாக இருந்தாலும் சரி, இந்திய அணியின் போட்டியாக இருந்தாலும் சரி, வீரர்கள் எப்போதும் அவரைச் சுற்றி இருப்பார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2007ம் ஆண்டில் அறிமுகமானவர் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. அவர் 105 டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 80 ஒருநாள் போட்டிகளில் 115 விக்கெட்டுகளையும், 14 டி20 போட்டிகளில் 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், களத்தில் கேப்டன் கூலாக வலம் வரும் முன்னாள் இந்தியா கேப்டன் எம்.எஸ் டோனி மிஸ்டர் கூல் இல்லை என்றும், அவர் அடிக்கடி அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார் என்றும் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மஹி பாய்க்கு பல பலங்கள் உள்ளன. ஆனால் அமைதியும், கூலாக இருப்பதும் அவற்றில் ஒன்றல்ல. அவர் களத்தில் அடிக்கடி கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அதை நான் நேரில் கேட்டிருக்கிறேன். ஐ.பி.எல் போட்டியாக இருந்தாலும் சரி, இந்திய அணியின் போட்டியாக இருந்தாலும் சரி, வீரர்கள் எப்போதும் அவரைச் சுற்றி இருப்பார்கள். மஹி பாயுடன் யாரேனும் ஒருவர் அமர்ந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். இது நமது கிராமத்தில் மரங்களைச் சுற்றி அமர்ந்து இருப்பது போன்ற உணர்வு தான்.
அவர் கோபப்படுவது வழக்கம் அல்ல. ஒரு டெஸ்ட் போட்டியின் போது நான் த்ரோவை சரியாக அடிக்காததால் அவர் ஆத்திரமடைந்தார்.
டோனியை கோபமாக நான் பார்த்ததில்லை. ஆனால் நான் பந்தை அவரிடம் வீசும் போது அது கீழே போனது. முதல் முறை வீசியபோது, நான் அவர் கோபமடைந்ததை பார்த்தேன். இரண்டாவதாக வீசிய போது அது இன்னும் அதிகமாக இருந்தது. மூன்றாவது முறையாக வீசும் போது அதைக் கையில் கொடுங்கள் என்றார். அவர் அதை திட்டும் விதமாக சொன்னார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.