null
டி-20 உலகக் கோப்பை மூலம் ரூ.1800 கோடி வருமானம் ஈட்டப்போகும் டிஸ்னி ஸ்டார்
- ஐபிஎல் ஃபீவரில் இந்திய ரசிகர்கள் உள்ள நிலையில் விரைவில் டி20 உலகக் கோப்பையும் வர உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்துக்கு கிடைக்கக்கூடிய வருவாயின் அளவுக்கு டி20 உலகக்கோப்பை போட்டிகளிலும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது
ஐபிஎல் ஃபீவரில் இந்திய ரசிகர்கள் உள்ள நிலையில் விரைவில் டி20 உலகக் கோப்பையும் வர உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.ஐபிஎல்- க்கு பின் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் டி-20 உலகக் கோப்பை 2024 வரும் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கி ஜூன் 29 ஆம் தேதி வரை பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் பொறுபேற்று நடத்துகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் கிரிக்கெட் என்பது விளையாட்டு என்பதையும் தாண்டி பணம் கொழிக்கும் முக்கிய வணிக வியாபாரமாக உருவெடுத்துள்ளது. இந்த தலைமுறை இளைஞர்கள் கிரிக்கெட் மீது கொண்டுள்ள அதீத ஆர்வமே இந்த வணிகத்தின் பிரதான முதலீடு ஆகும்.
ஐபிஎல் ஆகினும் உலகக்கோப்பை போட்டிகள் ஆகினும் பல்வேறு நிறுவனங்கள் தங்களை விளம்பரப் படுத்திக்கொள்ள இதை சரியான களமாக பயன்படுத்திக் கொள்வர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான டி20 போட்டிகளை ஒளிபரப்பும் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்துக்கு விளம்பரங்கள் மூலமும் அதனுடன் தொடர்புடைய வர்த்தகங்கள் மூலமும் மொத்தமாக ரூ.1600 முதல் ரூ.1800 வரை வருமானம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்துக்கு கிடைக்கக்கூடிய வருவாயின் அளவுக்கு டி20 உலகக்கோப்பை போட்டிகளிலும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. விளம்பரங்களுக்கு 40 சதவீதம் வர்த்தக இடத்தை ஒதுக்கியுள்ள டிஸ்னி ஸ்டார்க்கு கேமிங் மற்றும் இதர ஒளிபரப்ப்பு தொடர்புடைய வர்த்தகங்கள் மூலமும் இந்த அளவு வருமானம் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை 2024 இந்திய கிரிக்கெட் அணியில், ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங் , ஜஸ்பிரித் பும்ரா, முகமட். சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.