கிரிக்கெட் (Cricket)

டேவிட் மலான், டாப்ளே அபாரம் - 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

Published On 2023-10-10 13:03 GMT   |   Update On 2023-10-10 13:03 GMT
  • முதலில் ஆடிய இங்கிலாந்து 364 ரன்களை குவித்தது.
  • அந்த அணியின் டேவிட் மலான் சதமடித்து அசத்தினார்.

தர்மசலா:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இமாசலப்பிரதேசத்தின் தர்மசலாவில் 7வது லீக் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. டேவிட் மலான் 107 பந்தில் 5 சிக்சர், 16 பவுண்டரி உள்பட 140 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 68 பந்தில் ஒரு சிக்சர், 8 பவுண்டரி உள்பட 82 ரன்கள் சேர்த்தார்

வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி 76 ரன்னில் அவுட்டானார். முஷ்பிகுர் ரஹிம் 51 ரன்னில் வெளியேறினார். ஹிருடோய் 39 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், வங்காளதேசம் 227 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

இங்கிலாந்து சார்பில் ரீஸ் டாப்ளே 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News