நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் - இங்கிலாந்து அபார வெற்றி
- நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 126 ரன்களுக்கு சுருண்டது.
- இதன்மூலம் இங்கிலாந்து 267 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மவுண்ட் மாவ்கனி:
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 58.2 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 325 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 89 ரன்னும், டெக்க்ட் 84 ரன்னும் எடுத்தனர். ஒல்லி போப் 42 ரன்னும், போக்ஸ் 38 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்டும், சபுத்தி, குஜ்ஜிலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 306 ரன்களில் ஆல் அவுட்டானது. டாம் பிளெண்டல் சதமடித்து, அவர் 138 ரன்னிலும், கான்வே 77 ரன்னிலும் அவுட்டாகினர்.
இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
19 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 374 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ரூட், ஹாரி புரூக் மற்றும் பென் போக்ஸ் ஆகியோர் அரை சதமடித்தனர். ரூட் 57 ரன்னிலும், ஹாரி புரூக் 54 ரன்னிலும், பென் போக்ஸ் 51 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப் ஒரு ரன்னில் அரை சதம் தவறவிட்டார்.
நியூசிலாந்து சார்பில் டிக்னர், பிரேஸ்வெல் தலா 3 விக்கெட்டும், நீல் வாக்னர், குஜ்ஜிலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
394 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்களை
ஸ்டூவர்ட் பிராட் விரைவில் வெளியேற்றினார். இறுதியில், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
இந்நிலையில், நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்தின் டேரில் மிட்சேல் அரை சதம் அடித்து அவுட்டாகாமல் உள்ளார்.
இறுதியில் நியூசிலாந்து 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்த்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட் , ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஹாரி புரூக்குக்கு அளிக்கப்பட்டது.