2வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து 435 ரன் குவித்து டிக்ளேர்- நியூசிலாந்து திணறல்
- நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டும், பிரேஸ்வெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- நியூசிலாந்து அணி 42 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நேற்றைய முதல் நாள் முடிவில் 65 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 315 ரன் எடுத்தது. மழையால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.
ஹாரிபுரூக் 184 ரன்னுடனும், ஜோரூட் 101 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய ஹாரி புரூக் 186 ரன்னிலும், ஜோ ரூட்153 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
இங்கிலாந்து 87.1 ஓவர்க ளில் 8 விக்கெட் இழப்புக்கு 435 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டும், பிரேஸ்வெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. கான்வே ரன் எதுவும் எடுக்காமலும், வில்லியம்சன் 4 ரன்னிலும், வில் யங் 2 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
அதன்பின் டாம் லாதம் (35 ரன்), நிக்கோலஸ் (30 ரன்) ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்து விளையாடியது. அவர்கள் அவுட் ஆன பிறகு விக்கெட்டுகள் சரிந்தது.
நியூசிலாந்து அணி 42 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது டாம் ப்ளூன்டெல் 25 ரன்னுடனும், டிம் சவுத்தி 23 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஜாக் லீச் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.