கிரிக்கெட் (Cricket)

146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைத்திடாத புதிய சாதனை- பாகிஸ்தான் வீரர் அசத்தல்

Published On 2023-07-27 05:52 GMT   |   Update On 2023-07-27 05:52 GMT
  • முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
  • சவுத் ஷக்கில் இரண்டாவது டெஸ்டில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்ததன் மூலம் 146 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைத்திடாத புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் தொடங்கியது. முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாளில் 28.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளில் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 38.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து இருந்த போது பலத்த மழை பெய்ததால் அத்துடன் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து 3-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த சவுத் ஷக்கில் இரண்டாவது டெஸ்டில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்ததன் மூலம் 146 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைத்திடாத புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். இதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்று பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

முன்னதாக அவர் முதல் டெஸ்டில் 76 ரன்களும், இரண்டாவது டெஸ்டில் 63 மற்றும் 94 ரன்களும், மூன்றாவது டெஸ்டில் 53 ரன்களும், நான்காவது டெஸ்டில் 55 ரன்களும், ஐந்தாவது டெஸ்டில் 125 ரன்களும், ஆறாவது டெஸ்டில் 208 ரன்களும், ஏழாவது டெஸ்டில் 53 ரன்களும் எடுத்து புதிய சாதனையை அவர் படைத்தார். 

Tags:    

Similar News