கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்று சாதனை படைத்த இந்தியா

Published On 2024-03-08 10:21 GMT   |   Update On 2024-03-08 10:21 GMT
  • ரோகித், கில் சதம் அடித்து அசத்தினர்.
  • ஜெய்ஸ்வால், சர்ப்ராஸ் கான், படிக்கல் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோரின் அரைசதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய ரோகித், கில் சிறப்பாக சதம் அடித்து அவுட் ஆகினர். இதனையடுத்து வந்த சர்ப்ராஸ் கான், படிக்கல் அரை சதம் அடித்து அவுட் ஆனார்கள். இதன்மூலம் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக இந்திய டாப் 5 பேட்ஸ்மேன்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஜெய்ஸ்வால் 57, ரோகித் 103, சுப்மன் கில் 110, படிக்கல் 65, சர்ப்ராஸ் கான் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News