இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்
- வங்காளதேசம் அணிக்கு எதிரான தொடரில் இருந்து மோர்கல் பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்படுவார்.
- லக்னோ அணியின் வழிகாட்டியாக கம்பீர் இருந்தபோது மோர்கல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார்.
சமீபத்தில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளர், பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளர் போன்றவர்களையும் தேர்வு செய்யாமல் இருந்தது.
அதன்படி பீல்டிங், பேட்டிங் பயிற்சியாளர்கள் இலங்கை தொடருடன் இந்திய அணியில் இணைந்துள்ளனர். இதனை தொடர்ந்து பந்து வீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மோர்னே மோர்கலை நியமிக்குமாறு கம்பீர் கேட்டுள்ளார். அதற்கு மட்டும் பிசிசிஐ எந்த பதிலும் கூறாமல் இருந்தது.
இந்நிலையில் வங்களாதேசம் அணிக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் செயல்படுவார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கவுதம் கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் இருவரும் நீண்ட நாட்களாக நல்ல உறவு இருந்து வருகின்றனர். கம்பீர் ஒரு வீரராக கொல்கத்தா அணிக்கு விளையாடிய போது மோர்கல் விளையாட்டுள்ளார். மேலும் லக்னோ அணியின் வழிகாட்டியாக கம்பீர் இருந்தபோது மோர்கள் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.