கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கேரி க்ரிஸ்டன் நியமனம்

Published On 2024-04-28 11:10 GMT   |   Update On 2024-04-28 11:10 GMT
  • ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்
  • பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

அண்மையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியை ஷாஹீன் அப்ரிடி ராஜினாமா செய்தார். அதன்பின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்.

2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை சென்றது. ஆதலால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 2011ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி க்ரிஸ்டன் தற்போது பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் மஹ்மூத், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மே 22 முதல் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு மேற்கொள்ளும் டி20 சுற்றுப்பயணத்தில் இருந்து கிர்ஸ்டன் பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் இந்தியா, அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.

Tags:    

Similar News